தாளவாடி அருகே சாராயம் விற்ற பெண் கைது
Bhavanisagar King 24x7 |1 Dec 2024 4:54 AM GMT
தாளவாடி அருகே சாராயம் விற்ற பெண் கைது
தாளவாடி அருகே சாராயம் விற்ற பெண் கைது தாளவாடி அருகே உள்ள மரியாபுரம் கிராமத்தில் சாராயம் காய்ச்சப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் தாளவாடி போலீசார் மரியாபுரத்தில் உள்ள மாரி யம்மா என்பவருடைய வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது வீட்டுக்குள் ஒரு பிளாஸ்டிக் கேனில் 12 லிட்டர், சாராயம் இருந்தது. இதையடுத்து மாரியம்மாவிடம் போலீ சார் விசாரணை நடத்தினர். அதில் அவர் சாராயம் காய்ச்சி வீட்டில் பதுக்கிவைத்து விற்பது தெரிந்தது. இதைத்தொடர்ந்து மாரியம்மாவை போலீசார் கைது செய்தனர். 5 லிட்டர்சாரா யமும் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சாராயம் விற்றதாக மரியாபுரம் கிராமத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story