சங்கரன்கோவில் திமுக பொதுக்கூட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது

சங்கரன்கோவில் திமுக பொதுக்கூட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது
திமுக பொதுக்கூட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் முப்புடாதி அம்மன் கோவில் முன்பு தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா தலைமையில் ஆலோசனை பொதுக்கூட்டம் மற்றும் ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு நல திட்டம் உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துச்செல்வி, ஜிபி ராஜா, மற்றும் மோகநிதி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இந்த நிகழ்ச்சியில் திமுக தென்காசி வடக்கு மாவட்ட பொருளாளர் இல.சரவணன், நகரச் செயலாளர் பிரகாஷ் சொல்லிட்ட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
Next Story