ஆட்டையாம்பரப்பு அருகே டூவீலர்கள் மோதல். முதியவர் படுகாயம். காவல்துறை வழக்கு பதிவு.

ஆட்டையாம்பரப்பு அருகே டூவீலர்கள் மோதல். முதியவர் படுகாயம். காவல்துறை வழக்கு பதிவு.
ஆட்டையாம்பரப்பு அருகே டூவீலர்கள் மோதல். முதியவர் படுகாயம். காவல்துறை வழக்கு பதிவு. கரூர் மாவட்டம், சுக்காலியூர் அருகே உள்ள பண்டுதகாரன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி வயது 62. இவர் நவம்பர் 29ஆம் தேதி காலை 9 மணியளவில், கரூர்- மதுரை சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் ஆட்டையாம்பரப்பு பகுதியில் செயல்படும் திண்டுக்கல் வேணு பிரியாணி கடை எதிரே சென்றபோது, அதே சாலையில் பின்னால் வந்த கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, நவமரத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த வேலாயுதம் மகன் பிரவீன் ராஜ் வயது 25 என்பவர் வேகமாக ஓட்டி வந்த மற்றொரு டூவீலர் சுப்பிரமணி ஓட்டி சென்ற டூவீலரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்த சுப்பிரமணிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த சுப்பிரமணியின் மகள் ஷோபா வயது 34 என்பவர் அளித்த புகாரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய பிரவீன் ராஜ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் காவல்துறையினர்.
Next Story