கந்தம்பாளையத்தில் மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிர் இழப்பு. காவல்துறை வழக்கு பதிவு.

கந்தம்பாளையத்தில் மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிர் இழப்பு. காவல்துறை வழக்கு பதிவு.
கந்தம்பாளையத்தில் மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிர் இழப்பு. காவல்துறை வழக்கு பதிவு. கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, பவித்திரம் அருகே உள்ள கந்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கலிங்கதுரை மனைவி ஏசுரத்தினம் வயது 62. கலிங்கதுரை தனது வீட்டை புதுப்பிப்பதற்காக மாடிப்படிகளை மாற்றி அமைத்து, ஒரு அறையை உருவாக்கினார். புதிதாக உருவாக்கப்பட்ட அறைக்கு ஏற்கனவே இருந்த வீட்டிலிருந்து மின் இணைப்பை தற்காலிகமாக கொடுத்திருந்தார். இந்நிலையில் நவம்பர் 30ம் தேதி காலை 9:30 மணியில் இருந்து 12 மணிக்கு உள்ளான இடைப்பட்ட நேரத்தில் கலிங்கதுறையின் மனைவி இயேசுரத்தினம் புதிதாக அமைக்கப்பட்ட அறைக்கு மின் இணைப்பு கொடுப்பதற்காக முயற்சித்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி, மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். சொந்த வேலையாக வெளியே சென்று இருந்த கலிங்கதுரை வீட்டுக்கு வந்த போது, தனது மனைவி மின்சாரம் தாக்கி கீழே விழுந்திருப்பது கண்டு, அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக தனது மனைவியை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சை கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் இயேசுரத்தினம் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால், கலிங்கதுரை இது தொடர்பாக காவல்துறையினர்க்கு அளித்த புகாரில்,சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், உயிரிழந்த இயேசுரத்தினம் உடலை, உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story