தேசிய நீரிழிவு நோய் விழிப்புணர்வு முகாம்

X
Komarapalayam King 24x7 |1 Dec 2024 1:37 PM ISTகுமாரபாளையம் அருகே தேசிய நீரிழிவு நோய் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி சத்யா நகர், எதிர்மேடு, ஓலப்பாளையம், சடையம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில் ஜே.கே.கே. சம்பூரணி அம்மாள் பார்மசி கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் தேசிய நீரிழிவு நோய் விழிப்புணர்வு முகாம் தாளாளர் ஜெயபிரகாஷ் தலைமையில் நடந்தது. நீரிழிவு நோய் குறித்தா விளிப்புனர்ர்வு வாசகங்கள் கொண்ட துண்டு பிரசுரங்கள் வீடு வீடாக மாணவ, மாணவியர் கொடுத்தனர். மேலும் நோய் தடுப்பு முறை குறித்த ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் தட்டான்குட்டை ஊராட்சி தலைவி புஷ்பா, வட்டார மருத்துவ அலுவலர் (பொ)செந்தாமரை, கல்லூரி முதல்வர் செந்தில்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
Next Story
