ஏரிக்கால்வாயில் தவறி விழுந்து மூன்று வயது குழந்தை பலி.

X
ஆரணி அடுத்த களம்பூர் பேரூராட்சிக்குட்பட்ட வளையல்காரகுன்று என்ற பகுதியில் ஏரிக்கால்வாயில் 3 வயது குழந்தை தவறி விழுந்து பலி ஆரணி அடுத்த களம்பூர் பேரூராட்சிக்குட்பட்ட வளையல்காரக் குன்று என்ற பகுதியில் மாதவன்- பிரபா தம்பதியர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மூன்று வயதுடைய பிரதீப் என்கிற ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் பலத்த மழை காரணமாக இவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள ஏரிக்கால்வாயில் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இன்று காலை 3 வயது குழந்தை பிரதீப் என்பவர் நடந்து செல்லும் போது தவறி ஏரிக் கால்வாயில் விழுந்து தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். பின்பு இதனை அறிந்த தம்பதியர் குழந்தையை மீட்டெடுத்த போது குழந்தை இறந்து கிடந்தது. இது குறித்து களம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story

