மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச உணவு

மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச உணவு
மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச உணவு
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல் படியும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதல் படியும் மழையால் பாதிக்கப்பட்டு உணவு இன்றி தவிக்கும் ஏழைகளுக்கு காலை மதியம் இரவு என மூன்று வேளையும் உணவு வழங்க திருச்செங்கோடு நகர் மன்ற தலைவர் ஏற்பாடு செய்தார். புயலை தொடர்ந்து திருச்செங் கோட்டில் நேற்று இரவு முதல் அவ்வப்போது விட்டு விட்டு மிதமான மழை பெய்து வரும் நிலையில் திருச்செங்கோடு நகரப் பகுதியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உணவுக்கு வழியின்றி தவிக்கும் ஏழைகளுக்கு திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு சார்பில் அம்மா உணவகத்தில் இலவச உணவும் பேருந்து நிலைய பகுதிகளில் இருக்கும் ஏழை களுக்கு மூன்று நேரமும் இலவச உணவு வழங்க ஏற்பாடு. காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு அம்மா உணவகத்தில் தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இலவச உணவு வழங்கினார் நிகழ்ச்சியில் நாமக்கல் மேற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு, நெசவாளர் அணி அமைப்பாளர் சரவண முருகன் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருச்செங்கோடு நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு கூறியதாவது தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் புயல் தாக்குதலைத் தொடர்ந்து யாரும் ஒருவேளை உணவின்றி தவித்து விடக்கூடாது என தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் ஸ்டாலின் அவர்கள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் தமிழ்நாட்டின் துணை முதல்வர்உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதலின் படியும் நாமக்கல் மேற்கு மாவட்டமாவட்ட செயலாளர் மதுரா செந்தில் ஆலோசனையின் படி விட்டு விட்டு பெய்து வரும் மிதமான மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உணவுக்கு வழியின்றி தவிக்கும் ஏழைகளுக்கு அம்மா உணவகத்தில் மூன்று வேளை இலவச உணவு வழங்க ஏற்பாடு செய்துள்ளோம் இதே போல் பேருந்து நிலையப் பகுதிகள் ஆங்காங்கே மழைக்கு ஒதுங்கி உள்ள பொதுமக்களை கண்டறிந்து அனைவருக்கும் உணவு வழங்கப்படுகிறது.பொதுமக்கள் நலனில் எப்போதும் அக்கறை கொண்டு செயல்படும்தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு அனைத்து மக்களும் உணவின்றி தவிக்கக்கூடாது என்று கூறியதன் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என கூறினார்.
Next Story