திருக்காம்புலியூர் ரவுண்டானாவில் டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். அண்ணன்,தங்கை படுகாயம்.
Karur King 24x7 |2 Dec 2024 11:51 AM GMT
திருக்காம்புலியூர் ரவுண்டானாவில் டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். அண்ணன்,தங்கை படுகாயம்.
திருக்காம்புலியூர் ரவுண்டானாவில் டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். அண்ணன்,தங்கை படுகாயம். கரூர், ரெட்டிபாளையம், வசந்த்நகர், தரணி கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் கோபால் மகன் ரெங்கநாதன் வயது 53. இவரது சகோதரி கரூர் வடிவேல் நகர், பாரதியார் தெருவை சேர்ந்தவர், ரவிச்சந்திரன் மனைவி ஜீவா வயது 49. இவர்கள் இருவரும் நவம்பர் 30ஆம் தேதி அதிகாலை 5 மணி அளவில் கரூர்- கோவை சாலையில் உள்ள திருக்காம்புலியூர் ரவுண்டானா அருகே அவர்களது டூவீலரில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது எதிர் திசையில்,கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா,வயலூர் அருகே உள்ள நடுப்பட்டி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் வயது 30 என்பவர் வேகமாக ஓட்டி வந்த மற்றொரு டூவீலர் ரெங்கநாதன் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நிலை தடுமாறி வாகனத்துடன் கீழே விழுந்ததில் அண்ணன்,தங்கை இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக இருவரையும் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ரெங்கநாதன் அளித்த புகாரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி, விபத்து ஏற்படுத்திய மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் கரூர் மாநகர காவல் துறையினர்.
Next Story