ராம்நகர் பிரிவு டூவீலர் மீது அரசு பேருந்து மோதி விபத்து. கணவன் மனைவி படுகாயம்.
Karur King 24x7 |2 Dec 2024 12:39 PM GMT
ராம்நகர் பிரிவு டூவீலர் மீது அரசு பேருந்து மோதி விபத்து. கணவன் மனைவி படுகாயம்.
ராம்நகர் பிரிவு டூவீலர் மீது அரசு பேருந்து மோதி விபத்து. கணவன் மனைவி படுகாயம். திருப்பூர் மாவட்டம், தாராபுரம், ராஜபுரம் அருகே கவுண்டப்ப கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன் வயது 56. இவரது மனைவி சுசீலா வயது 50. இவர்கள் இருவரும் டிசம்பர் 1-ம் தேதி அதிகாலை 5:30 மணி அளவில், கரூர் - சேலம் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டிருந்தனர். இவர்களது வாகனம் வேலாயுதம்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராம்நகர் பிரிவு பகுதியில் செயல்படும் என் கே எம் பேக்கரி எதிர் திசையில் செல்லும்போது, புதுக்கோட்டை, நாகமலை ,தில்லை நகர், ராதாகிருஷ்ணன் தெருவை சேர்ந்த ராமச்சந்திரன் வயது 46 என்பவர் வேகமாக ஓட்டி வந்த அரசு பேருந்து, ஜெகநாதன் ஓட்டிச் சென்ற டூவீலரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வாகனத்துடன் நிலை தடுமாறி கீழே விழுந்ததில், கணவன்- மனைவி இருவருக்கும் படுகாயம் ஏற்பட்டது. உடனடியாக இருவரையும் மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஜெகநாதன் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், அரசு பேருந்தை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய அரசு பேருந்து ஓட்டுனர் ராமச்சந்திரன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.
Next Story