தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் கைது, கண்டன ஆர்ப்பாட்டம்.

மேட்டுப்பாளையத்தில் பட்டியல் இன சமுதாயத்தை சேர்ந்த 17 அருந்ததியர் உயிரிழந்ததற்கு வீரவணக்கம் பேரணி நடத்த இருந்த நிலையில் தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டார்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் பட்டியல் இன சமுதாயத்தைச் சார்ந்த 17 அருந்ததியர் உயிரிழந்ததற்கு வீர வணக்க பேரணி நடத்த இருந்த தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் எம்ஏ,பிஎல் இன்று அதிகாலையில் கைது செய்ததை கண்டித்து நாமக்கல் மத்திய மாவட்ட செயலாளர் டாக்டர். குமரவேல் அவர்களின் ஆலோசனையின் படி சனநாயக முறையில் தமிழக அரசினையும், கோவை மாவட்ட காவல்துறை கண்டித்து புதுச்சத்திரம், மோகனூர், மற்றும் பரமத்தி ஆகிய ஒன்றியங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Next Story