தமிழ்நாடு பேரூராட்சிகளின் துப்புரவு மேற்பார்வையாளர்கள் சங்க மாநில பொதுக் கூட்டம்.

X
Paramathi Velur King 24x7 |2 Dec 2024 8:59 PM ISTதமிழ்நாடு பேரூராட்சிகளின் துப்புரவு மேற்பார்வையாளர்கள் சங்க மாநில பொதுக் கூட்டம் பரமத்தி வேலூரில் நடைபெற்றது.
பரமத்திவேலூர், டிச. 2: பரமத்தி வேலூரில் உள்ள ஒரு தனியார் உணவக கூட்டரங்கில் தமிழ்நாடு பேரூராட்சிகளின் துப்புரவு மேற் பார்வையாளர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் ஞாயிற் றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநிலச் செய லாளர் ஜனார்த்தனன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் பாபுசங்கர் சிறப்புரை யாற்றினார். கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு. புதிய உதவி துப்புரவு ஆய்வா ளர் பணியிடத்துக்கு அனைத்து மாவட்டங்களில் பணிபுரியும் துப்புரவு மேற்பார்வையாளர் கள் பல ஆண்டுகளாக திடக்க ழிவு மேலாண்மை, பொது சுகாதாரப் பணியை மேற்பார்வை செய்யப்பட்டதை அடிப்படையாகக் கொண்டும், சிறப்பினம் கருதி ஒருமுறை தளர்வு செய்து தகுதி வாய்ந்த விருப்பம் உள்ள துப்புரவு மேற்பார்வையாளர்களுக்கு, உதவி துப்புரவு ஆய்வாளர் பணியிடத்திற்கு பதவிஉயர்வு வழங்க வேண்டும். உதவி துப்புரவு ஆய்வாளர் பணியி டத்திற்கு பதவி உயர்வு வழங்கப் பட்ட பிறகு குறிப்பிட்ட காலத் துக்குள் பயிற்சி பெற அரசிடம் கோரிக் வைப்பது, பேரூராட்சிகளை நகராட்சியாக தரம் உயர்த்தல் மற்றும் மாநகராட்சி, நகராட்சியுடன் இருந்து பேரூ ராட்சிகளை இணைக்கும் முன்பு சுய விருப்பத்துடன் கோரும் துப்புரவு மேற்பார்வையாளருக்கு அந்தந்த மாவட்டங்களில் காலியாக உள்ள துப்புரவு மேற்பார் வையாளர் பணியிடத்திலோ, அருகில் உள்ள மாவட்டத்திலோ, பணி மாறுதல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மாநில துணை செயலாளர் முத்தழகு நன்றி கூறினார்.
Next Story
