சிவகங்கை உழவர் வயல்வெளி பள்ளி பயிற்சி

சிவகங்கை உழவர் வயல்வெளி பள்ளி பயிற்சி
X
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அருகே வெள்ளூர் கிராமத்தில் உழவர் வயல்வெளி பள்ளி பயிற்சி நடைபெற்றது
சிவகங்கை அருகே பில்லலூர் கிராமத்தில் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டம் உப்பாறு உபவடி நிலப்பகுதியில் விவசாயிகளுக்கு உழவர் வயல்வெளி பள்ளி பயிற்சி நடைபெற்றது. வேளாண்மை இணை இயக்குநர் சுந்தரமகாலிங்கம் இப்பயிற்சிக்கு தலைமை வகித்து உழவர் வயல்வெளி பள்ளியின் முக்கியத்துவம் பற்றியும் நெல்லில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பற்றிய தொழில்நுட்பங்களையும் எடுத்துரைத்தார். வேளாண்மை துணை இயக்குநர் சண்முகஜெயந்தி ஒருங்கிணைந்த உரம் மற்றும் பூச்சி மேலண்மை முறைகள் பற்றி கூறினார். வேளாண்மை உதவி இயக்குநர் வளர்மதி அவர்கள் நெல் இரகங்கள் தேர்வு முறை மற்றும் விதை நேர்த்தி, நாற்றங்கால் பராமரிப்பு பற்றி கூறினார். விதைச்சான்று உதவி இயக்குநர் சக்தகணேஷ் திரவ உயிர் உரங்கள் பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் கூறினார். மண் ஆய்வக வேளாண்மை அலுவலர் ஆர்த்தி அவர்கள் மண் பரிசோதனையின் முக்கியத்துவம் மற்றும் மண்வள அட்டையை பயன்படுத்தி உரநிர்வாகம் மேற்கொள்ளும் முறைகள் பற்றி கூறினார். உதவி வேளாண்மை அலுவலர் பானுப்ரியா திட்டங்கள் மற்றும் இடுபொருள் மானிய விவரங்கள் பற்றியும் கூறினார்.
Next Story