திருவேங்கடத்தில் குண்டும்,குழியுமான சாலை சீரமைக்கப்படுமா என பொதுமக்கள் கோரிக்கை

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடத்தில் உள்ள சிவகாசி மற்றும் கோவில்பட்டி சாலையில் எப்போதும் போக்குவரத்து நிறைந்து மக்கள் நடமாட்டத்துடன் பரபரப்பாக காணப்படும். மேலும் சாலையின் இருபுற மும் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டு சாலை குறுகி கொண்டே வருகிறது. இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் அந்தப் காளைகளில் அனைத்து அரசு அலுவல கங்கள், வங்கிகள், வர்த்தக ஸ்தாபனங்கள் மற்றும் அரசு பேருந்துகள் 100-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி வாகனங்கள், கன ரக வாகனங்கள் (குவாரி) மற்றும் தனியார் வாகனங்கள் வந்து செல்லக்கூடிய பகுதியில் தற்போது சாலை குண்டும் குழிகளாக சேதமாகி உள்ளது. இதனை உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து பார்வையிட்டு இந்த சாலையை சீர்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

