கரூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஓய்வூதிய சங்கங்களின் கூட்டமைப்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது.

கரூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஓய்வூதிய சங்கங்களின் கூட்டமைப்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது.
கரூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஓய்வூதிய சங்கங்களின் கூட்டமைப்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு, தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் சாமுவேல் சுந்தரபாண்டியன் தலைமையில் மாநிலம் தழுவிய தர்ணா போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் போது, புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 70 வயதை அடைந்த ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் 10% வழங்கிட வேண்டும். தமிழக அரசில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு பொதுத்துறையிலிருந்து ஓய்வூதியம் பெற்றவர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850-வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
Next Story