மஞ்ச நாயக்கன்பட்டி அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல் ஒருவர் உயிரிழப்பு.

மஞ்ச நாயக்கன்பட்டி அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல் ஒருவர் உயிரிழப்பு.
மஞ்ச நாயக்கன்பட்டி அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல் ஒருவர் உயிரிழப்பு. கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா மஞ்ச நாயக்கன்பட்டி அருகே உள்ள கள்ளபொம்மன் பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி வயது 40. இவர் டிசம்பர் 1ஆம் தேதி இரவு 8 20 மணி அளவில் காணியாலம்பட்டியில் இருந்து புலியூர் செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டிருந்தார். இவரது வாகனம் மஞ்சநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள ராமநாதன் என்பவரது தோட்டத்தின் அருகே சென்ற போது, எதிர்திசையில்,கரூர் மாவட்டம், காணியாளம்பட்டி ஏ.டி காலனி பகுதியைச் சேர்ந்த பிரபு வயது 20 என்பவர் வேகமாக ஓட்டி வந்த மற்றொரு டூவீலர், பெரியசாமி ஓட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் பெரியசாமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பெரியசாமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அறிந்த பெரியசாமியின் மனைவி மகேஸ்வரி வயது 28 என்பவர், இது தொடர்பாக காவல்துறையினருக்கு அளித்த புகாரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டு, உயிரிழந்த பெரியசாமி உடலை உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி, விபத்து ஏற்படுத்திய பிரபு மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் மாயனூர் காவல்துறையினர்.
Next Story