உப்பு பாளையத்தில் நெஞ்சு வலியால் அவதிப்பட்ட இளைஞர் உயிரிழப்பு.

உப்பு பாளையத்தில் நெஞ்சு வலியால் அவதிப்பட்ட இளைஞர் உயிரிழப்பு.
உப்பு பாளையத்தில் நெஞ்சு வலியால் அவதிப்பட்ட இளைஞர் உயிரிழப்பு. கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, குப்பம் அருகே உள்ள உப்பு பாளையம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் திருமூர்த்தி வயது 29. டிசம்பர் 1ஆம் தேதி அன்று மதியம் 3 மணியளவில் திடீரென அவருக்கு அதிகப்படியான நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக அவரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு திருமூர்த்தியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அறிந்த திருமூர்த்தியின் மனைவி நவீனா அதிர்ச்சி அடைந்தார். மேலும், சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த திருமூர்த்தி உடலை உடற்கூறு ஆய்வுக்காக, அதே மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் க. பரமத்தி காவல்துறையினர்.
Next Story