மின்வாரிய ஊழியர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
Komarapalayam (Pallipalayam) King 24x7 |3 Dec 2024 1:34 PM GMT
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சிஐடியு தொழிற்சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தகுதி அளவில் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஒரு பகுதியாக பள்ளிபாளையம் சங்ககிரி சாலை ஒட்டமெத்தை ரவுண்டானா பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் சிஐடியு தொழிற்சங்க மாவட்ட தலைவர் எம்.அசோகன், பள்ளிபாளையம் கோட்ட செயலாளர் பழனிவேல்,விசைத்தறி தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் எஸ்.முத்துக்குமார் உள்ளிட்டோர் கண்டன. உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளாக 65,000 மேற்பட்ட காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் . ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் பகுதிநேர பணியாளர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் . 1.12.2023 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை உடனடியாக துவங்கி, அதுவரை இடைக்கால நிவாரணமாக மாதம் 5000 வழங்கிட வேண்டும். ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் பகுதிநேர பணியாளர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்..
Next Story