காங்கேயத்தில்  மாதாந்திர மின் பயனாளர்கள் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் 

காங்கேயத்தில்  மாதாந்திர மின் பயனாளர்கள் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் 
X
காங்கேயத்தில்  மாதாந்திர மின் பயனாளர்கள் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை  நடைபெறுகின்றது
பல்லடம் மின் பகிர்மான வட்டம், தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் காங்கேயம் கோட்டத்தில் மாதாந்திர மின்  பயனாளர்கள் குறைதீர்க்கும் கூட்டம் ஒவ்வொரு மாதமும் முதல் புதன்கிழமை நடைபெறும். அது போல் டிசம்பர் 2024-ஆம் மாதத்திற்கான மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் 06.12.2024 வெள்ளிக்கிழமை அன்று காலை 11:00 மணி முதல் மதியம் 01மணி வரை செயற்பொறியாளர் அலுவலகம் சென்னிமலை சாலையில் பொறியாளர் விமலா தேவி தலைமையில் நடைபெறுவதால் மின் பயனீட்டாளர்கள் மேற்படி கூட்டத்தில் மேற்பார்வை பொறியாளர் அவர்களை நேரில் சந்தித்து தங்களின் குறைகளை தெரிவித்து நிவர்த்தி பெறலாம் என தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
Next Story