மதுவிலக்கு கொண்டு வர முடியாது - அமைச்சர்!

மதுவிலக்கு கொண்டு வர முடியாது - அமைச்சர்!
நிகழ்வுகள்
புதுகையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, "தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டுவர முடியாது. அவ்வாறு கொண்டு வந்தால், பாண்டிச்சேரியில் இருந்து மதுவை வாங்கி வருவார்கள். இந்தியாவில் முழுவதும் மதுவிலக்கு கொண்டு வந்தால் நாங்கள் மதுவிலக்கு கொண்டு வருவோம். மதுவால் வரும் வருமானம் எங்களுக்கு தேவையில்லை மதுவிலக்கு தான் எங்கள் கொள்கை முடிவு" என தெரிவித்தார்.
Next Story