நாமக்கல் வாராஹி அம்மன் கோவிலில் நாளை சங்காபிஷேகம்!

நாமக்கல் வாராஹி அம்மன் கோவிலில் நாளை சங்காபிஷேகம்!
நாளை (டிசம்பர் 5) வியாழக்கிழமை கார்த்திகை மாத வளர்பிறை பஞ்சமி திதியை முன்னிட்டு நாமக்கல் வாராஹி அம்மன் கோவிலில் மாலை 4 மணிக்கு மேல் 108 மஹா சங்கு அபிஷேகம் நடைபெற உள்ளது.
நாமக்கல்- சேந்தமங்கலம் சாலை MGR நகரில் (இரயில் நிலையம் அருகில்) தங்காயி மற்றும் ஸ்ரீ வாராஹி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாதந்தோறும் வளர்பிறை மற்றும் தேய்பிறை பஞ்சமி திதி அன்று சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் / யாகம் நடைபெறும். இதுகுறித்து கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது..... நாளை (டிசம்பர் 5) வியாழக்கிழமை கார்த்திகை மாத வளர்பிறை பஞ்சமி திதியை முன்னிட்டு நாமக்கல் வாராஹி அம்மன் கோவிலில் மாலை 4 மணிக்கு மேல் 108 மஹா சங்கு அபிஷேகம் நடைபெற உள்ளது.அது சமயம் பக்தர்கள் தவறாமல் இந்த பூஜையில் கலந்து கொண்டு வாராஹி அம்மன் அருள் பெற வேண்டும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பூஜைக்கு தேவையான நெய், பழங்கள், பூக்கள் , ஹோம பொருட்கள் மற்றும் அபிஷேக பொருட்கள் வழங்கும்படியும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story