கரூரில்,உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு எய்ட்ஸ் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்று,மனித சங்கிலி மற்றும் கையெழுத்து இயக்கத்தில் கையொப்பம் செய்தார் மாவட்ட ஆட்சியர் தங்கவேல்.
Karur King 24x7 |4 Dec 2024 11:40 AM GMT
கரூரில்,உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு எய்ட்ஸ் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்று,மனித சங்கிலி மற்றும் கையெழுத்து இயக்கத்தில் கையொப்பம் செய்தார் மாவட்ட ஆட்சியர் தங்கவேல்.
கரூரில்,உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு எய்ட்ஸ் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்று,மனித சங்கிலி மற்றும் கையெழுத்து இயக்கத்தில் கையொப்பம் செய்தார் மாவட்ட ஆட்சியர் தங்கவேல். உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருள் மையமாக கொண்டு அனுசரிக்கப்பட்டுவருகிறது. அந்த அந்த வகையில் இந்த ஆண்டு "உரிமைப்பாதையில்" என்ற கருப்பொருள் மையமாக்க்கொண்டு அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களை கண்டறிய அதிக நம்பிக்கை மையங்களுக்கான சிகிச்சை வழங்கும் கூட்டும் மருந்து சிகிச்சை மையங்கள் உள்ளன. இந்நிலையில், இன்று உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், இன்று மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் அனைவரும் எய்ட்ஸ் விழிப்புணர்வு உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர். பின்னர் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மனித சங்கிலியும், வாகனங்களில் விழிப்புணர்வு ஒட்டுவில்லைகளையும் ஒட்டினார். எச்.ஐ.வி/எய்ட்ஸ் சட்டம் 2017 குறித்து அனைத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த இடத்திலும் புறக்கணித்தல் மற்றும் ஒதுக்குதல் இல்லாத நிலையினை உருவாக்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் உறுதிமொழி ஏற்றனர். இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சக்தி நர்சிங் கல்லூரி, அரசுக் கலைக்கல்லூரி தாந்தோன்றிமலை, CSI கல்லூரி மாணவர்கள், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் லோகநாயகி, மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலர் சுமதி, மருத்துவக் கண்காணிப்பாளர் ராஜா மற்றும் சுகாதாரத்துறை பணியாளர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story