கரூர் மாவட்ட அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி.ஜெயலலிதா அவர்களுக்கு புகழஞ்சலி.

கரூர் மாவட்ட அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி.ஜெயலலிதா அவர்களுக்கு புகழஞ்சலி.
கரூர் மாவட்ட அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி.ஜெயலலிதா அவர்களுக்கு புகழஞ்சலி. தமிழக முன்னாள் முதலமைச்சராக செயலாற்றி, கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி உடல் நலக் குறைவால் காலமானார் செல்வி. ஜெயலலிதா. இதனைத் தொடர்ந்து, ஆண்டு தோறும் அவரது நினைவு நாளில் அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் கட்சியினர் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். சென்னையில் இன்று முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மறைந்த தங்களது தலைவர் ஜெயலலிதா அவர்களது திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செய்தனர். இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முன்னாள் அமைச்சர்கள் இன்று இதயம் கவர்ந்த தலைவர் ஜெயலலிதா அவர்களின் திருஉருவப்படம் மற்றும் சிலைகளுக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதே போல, கரூர் மாநகராட்சிக்குட்பட்ட லைட் ஹவுஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா அவர்களின் முழு திரு உருவ சிலைக்கு முன்னாள் தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தலைமையில் மலர் மாலை அணிவித்து, மலர்கள் தூவி மரியாதை செய்தனர். இதே போல அருகில் அமைக்கப்பட்டுள்ள அதிமுக முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் அறிஞர் அண்ணா ஆகியோர் திரு உருவ சிலைக்கும் மலர்மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட அவை தலைவர் திரு வி கா, எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் தானேஷ் (எ) முத்துக்குமார், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் திருநாவுக்கரசு உள்ளிட்ட மாவட்ட அளவிலான பல்வேறு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், மகளிர் அணியினர் என ஏராளமானோர் கலந்து கொண்டு மறைந்த தங்களது கட்சித் தலைவர்களுக்கு புகழஞ்சலி செலுத்தினர்.
Next Story