திருப்பத்தூரில் ஜெயலலிதாவின் நினைவு நாள் அனுசரிப்பு!

திருப்பத்தூரில்  ஜெயலலிதாவின்  நினைவு நாள் அனுசரிப்பு!
திருப்பத்தூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி, முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி பங்கேற்பு.
திரும்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி, முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி பங்கேற்பு. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் புதிய பேரூந்து நிலையம் அருகே அம்மாவின் 8 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி நகர செயலாளர் டி. டி. குமார் தலைமையில் நடைப்பெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட கழக செயலாளருமான கே.. சி. வீரமணி கலந்து கொண்டு புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் முன்னாள் முதல்வருக்கு ஜெயலலிதா திருவுருவ படத்திற்கு மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏந்தி அம்மாவின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. திருப்பத்தூர் நகர அதிமுக. மாவட்ட இளம் பாசறை டி.டி சங்கர். ரங்கநாதன்.திருப்பதி. லீலா சுப்பிரமணி. தம்பா கிருஷ்ணன். சதீஷ்.விவேகானந்தன். கணேசன்.ராஜகோபால்.ஆனந்தன். இதில் ஏராளமான அதிமுக பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Next Story