இரண்டு லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் வழங்கிய நாமக்கல் மாவட்ட வணிகர்கள்!

நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வணிகர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. பல்வேறு வணிகர் சங்கங்கள் மற்றும் வணிகர்கள் வழங்கிய ரூ 2 லட்சம் மதிப்புள்ள காய்கறி, மளிகை பொருட்கள், பிரட், பால் பவுடர், போர்வை உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
கடும் மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பும் பணியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறை ஈடுபட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிட நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வணிகர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.வேண்டுகோளை ஏற்று பல்வேறு வணிகர் சங்கங்கள் மற்றும் வணிகர்கள் வழங்கிய ரூபாய் 2 லட்சம் மதிப்புள்ள காய்கறி, மளிகை பொருட்கள்,பிரட், பால் பவுடர்,போர்வை உள்ளிட்ட நிவாரண பொருட்கள் மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது.இந்த நிகழ்வில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன், செயலாளர் பொன்.வீரக்குமார் மற்றும் பொருளாளர் சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Next Story