சீட்டுபணம் ஏமாற்றிய  தம்பதியர் மீது புகார்

சீட்டுபணம் ஏமாற்றிய  தம்பதியர் மீது புகார்
குமாரபாளையத்தில் சீட்டுபணம் ஏமாற்றியதம்பதியர் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் சீட்டுபணம் ஏமாற்றியதம்பதியர் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், பவானி, கண்ணாரா வீதியை சேர்ந்தவர் மாரியம்மாள், 55. இவர் குமாரபாளையம் பூலக்காடு பகுதியயை சேர்ந்த குப்புராஜ், 34, சங்கீதா, 28, ஆகிய தம்பதியரிடம் இரண்டு லட்சம் ரூபாய் ஏலச்சீட்டு போட்டனர். ஏலம் எடுத்த தொகை ஒரு லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் இதுவரை கொடுக்க வில்லை என்று கூறப்படுகிறது. இதை பலமுறை கேட்டும் தராததால், குமாரபாளையம் போலீசில் மாரியம்மாள் புகார் செய்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story