காவல்துறையை கண்டித்து இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பாதிக்கப்பட்ட மக்களுடன் கண்டன கோஷங்கள் எழுப்பினர்
கரூர் மாவட்டம் குளித்தலை, தோகைமலை, தரகம்பட்டி, பெட்டவாய்த்தலை ஆகிய இடங்களில் எஸ்எம் சிட்ஸ் பிரைவேட் லிமிடெட் பெயரில் ஸ்ரீ முருகன் குரூப்ஸ் நிறுவனம் ஏல சீட்டு நிறுவனம் நடத்தி வந்தனர். அதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சீட்டில் சேர்ந்து மாத மாதம் தவணை தொகையை கட்டி முதலீடு செய்துள்ளனர். முதிர்வு தொகையை பொதுமக்களிடம் திருப்பி தராமல் நிறுவனத்தை காலி செய்துவிட்டு கடந்த சில நாட்கள் முன்பு தலைமறைவாகி உள்ளனர். இது குறித்து கரூர் மாவட்ட எஸ்பி இடம் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் பொதுமக்களுடன் கோரிக்கை மனு அளித்துள்ளனர். அதன் பிறகு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். ஒரு மாதம் ஆகியும் பொதுமக்களை ஏமாற்றி மோசடி செய்து கோடிக்கணக்கில் பணத்தை கொள்ளை அடித்து தலை மறைவாகியுள்ள நிறுவன ஊழியர் வினோத் மீது கரூர் மாவட்ட காவல்துறை இதுவரை கைது செய்யாததை கண்டித்தும் பணத்தை மீட்டு தரக்கோரியும் மாவட்டத்தில் போலியாக உள்ள அனைத்து நிதி நிறுவனங்களையும் ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி குளித்தலை காந்தி சாலை முன்பு ஒன்றிய செயலாளர் முத்துச்செல்வன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
Next Story