கரூரில்,அம்பேத்கரின் நினைவு நாளில் பட்டியல் இன அமைப்பினர் சார்பில் வீரவணக்கம் செலுத்தினர்.

கரூரில்,அம்பேத்கரின் நினைவு நாளில் பட்டியல் இன அமைப்பினர் சார்பில் வீரவணக்கம் செலுத்தினர்.
கரூரில்,அம்பேத்கரின் நினைவு நாளில் பட்டியல் இன அமைப்பினர் சார்பில் வீரவணக்கம் செலுத்தினர். அண்ணல் அம்பேத்கர் 1891ம் ஆண்டு ஏப்ரல் 14ல் பிறந்தார் . சட்ட மேதை, பொருளாதார நிபுணர், அரசியல் தலைவர், சமூக சீர்திருத்தவாதி என பன்முகங்களைக் கொண்டிருந்த இவர், இந்திய அரசியலமைப்பின் வரைவுக் குழு தலைவராகவும் செயலாற்றினார். பட்டியல் சமூகத்தில் பிறந்தவரான அம்பேத்கர், புத்த மதத்தைத் தழுவினார். 1956ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி டெல்லியில் உள்ள தனது வீட்டில் அம்பேத்கர் மறைந்தார். அவரது மறைவு தினம், பிறப்பு இறப்பு எனும் கர்மத்தில் இருந்து விடுபடுவதைக் குறிக்கும் வகையில் மஹாபரிநிர்வான் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இன்று கரூர் ஜவஹர் பஜார் பகுதியில் உள்ள காமராஜர் சிலை முன்பு. பட்டியலின விடுதலைப் பேரவை மாநிலத் தலைவர் ஆனந்தராஜ் தலைமையில் அம்பேத்கர் திரு உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செய்தனர். இந்த நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் வழக்கறிஞர் தனபால், மகளிர் அணி செயலாளர் கண்மணி, கரூர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் சுதா, மாவட்ட செயலாளர் செந்தில்குமார், க.பரமத்தி ஒன்றிய செயலாளர் முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மறைந்த தங்கள் இனமான தலைவருக்கு புகழஞ்சலி செலுத்தினர்.
Next Story