பள்ளப்பட்டியில் தீ தடுப்பு முறை குறித்து விளக்கம் செய்து காட்டிய தீயணைப்பு நிலைய வீரர்கள்.
Karur King 24x7 |6 Dec 2024 10:45 AM GMT
பள்ளப்பட்டியில் தீ தடுப்பு முறை குறித்து விளக்கம் செய்து காட்டிய தீயணைப்பு நிலைய வீரர்கள்.
பள்ளப்பட்டியில் தீ தடுப்பு முறை குறித்து விளக்கம் செய்து காட்டிய தீயணைப்பு நிலைய வீரர்கள். தீயணைப்பு துறையின் சார்பில் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளான பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனை, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் ஆகிய பகுதிகளில் தீ பற்றி கொண்டால் அதை அணைப்பது குறித்து செயல்முறை விளக்கத்துடன் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுக்கா, பள்ளப்பட்டி அரசு மருத்துவமனையில் தீயணைப்பு துறை சார்பில், தீ விபத்தின் போது, தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பாக இருப்பது குறித்து, செவிலியர்கள், மருத்துவபணியாளர்களுக்கு தீயணைப்பு துறையின் சார்பில் செயல் விளக்கம் அளிக்கும் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. தீயணைப்பு துறை வீரர்கள் தீ விபத்து ஏற்பட்டால், தீயை தடுப்பது மற்றும் தீ தடுப்பு மீட்பு பணியில் எவ்வாறு ஈடுபடுவது என்பது குறித்து செயல்விளக்கத்துடன் செய்து காண்பித்தனர். மருத்துவமனையில் எதிர்பாராத விதமாக தீ பற்றிக்கொண்டால் தண்ணீர் ஊற்றி அணைக்காமல், ஈரத்துணியை வைத்து மட்டுமே அணைக்க வேண்டும், இல்லையென்றால் தீ, தடுப்பு சாதனங்களை கொண்டு பாதுகாப்பான முறையில் தீயை அணைக்க வேண்டும், மீட்பு பணிக்காக எந்த நேரத்திலும் தீயணைப்பு துறையினரை அழைக்கலாம் என்று விளக்கம் அளித்தனர்.
Next Story