அண்ணல் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு

X
Pallipalayam King 24x7 |6 Dec 2024 5:13 PM ISTலோக் ஜன சக்தி கட்சியின் சார்பில் அண்ணல் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது
அண்ணல் அம்பேத்கரின் 68-வது நினைவு நாள் நேற்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. அம்பேத்கர் சிலைக்கு பல்வேறு கட்சியை சார்ந்தவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன் ஒரு பகுதியாக பள்ளிபாளையம் திருச்செங்கோடு செல்லும் சாலையில் லோக் ஜனசக்தி கட்சியின் சார்பில் அம்பேத்கார் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து வீர வணக்க கோஷமிட்டனர். நிகழ்விற்கு லோக் ஜனசக்தி கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஆதவன் தலைமை தாங்கினார். தலைமை பொதுச் செயலாளர் சீனிவாசன், மாவட்ட செயலாளர் பாலு, சிறுபான்மையர் அணி மாவட்டத் தலைவர் அக்கீம், பெரியார் திராவிட விடுதலை கழகம் மாவட்ட அமைப்பாளர் முத்துப்பாண்டி மற்றும் பொதுமக்கள் நிகழ்வில் கலந்து அம்பேத்காருக்கு மரியாதை செலுத்தினர்..
Next Story
