திருப்பூர் மாநகராட்சி மதிமுக மாமன்ற உறுப்பினர்கள் மேயர் தினேஷ்குமாரிடம் புதிதாக விதிக்கப்பட்ட வரியை குறைக்க கோரி மனு!

திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமாரிடம் மதிமுக மாமன்ற உறுப்பினர்கள் புதிதாக விதிக்கப்பட்ட வரியை ரத்து செய்ய கோரி மனு அளித்தனர்.
திருப்பூர் மாநகராட்சி சார்பில் விதிக்கப்பட்டுள்ள வரி விதிப்பை ரத்து செய்யக்கூறி மதிமுக மாமன்ற உறுப்பினர்கள் சார்பில் மாநகராட்சி மேயரிடம் மனு அளிக்கப்பட்டது ! திருப்பூர் மாநகராட்சி  சார்பில்  சொத்து வரி வீட்டு வரி குடிநீர் வரி மற்றும் குப்பை வரி உள்ளிட்டவை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ள நிலையில் ஆண்டுதோறும் ஆறு சதவீத சொத்து வரி உயர்த்தப்படும் என அறிவித்துள்ளதை கண்டித்தும் ., உடனடியாக இந்த வரி விதிப்புகளை ரத்து செய்யக்கூறி  அனைத்து கட்சியினர் சார்பில் தனித்தனியே  திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டிக்கும் விதமாக   ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே உடனடியாக இந்த வரி விதிப்புகளை ரத்து செய்யக் கூறி  மதிமுக மாநகர மாவட்ட செயலாளரும் மாநகராட்சியின் 24 வது வார்டு மாமன்ற உறுப்பினர் நாகராஜ் ., உள்ளிட்டா மதிமுக மாமன்ர உறுப்பினர்கள் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் சந்தித்து  மனு அளித்தனர். இதை அடுத்து  செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக மாமன்ற உறுப்பினர் நாகராஜ்  கூறியதாவது வரி விதிப்பை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முறையிட்டுள்ளதாகவும் .,  நான்கைந்து நாட்களில் நல்ல முடிவு வரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
Next Story