தரகம்பட்டியில் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புகழஞ்சலி.
Karur King 24x7 |6 Dec 2024 12:28 PM GMT
தரகம்பட்டியில் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புகழஞ்சலி.
தரகம்பட்டியில் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புகழஞ்சலி. கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட, தரகம்பட்டி பேருந்து நிலையம் முன்பு புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 68 - வது நினைவு தினத்தை முன்னிட்டு, கடவூர் தெற்கு ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில்,கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளர குமணன் தலைமையில் அம்பேத்கர் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மலர்கள் தூவி வீரவணக்கம் செலுத்தினர். இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் அவிநாசி, முன்னாள் மாவட்ட துணை செயலாளர் கடவூர் ராமச்சந்திரன், கடவூர் தெற்கு ஒன்றிய துணை செயலாளர் முத்து வளவன், குளக்காரன்பட்டி சிவசக்தி,கடவூர் வடிவேல், மணிமாறன், முத்தகவுண்டம்பட்டி ராகவன் உள்ளிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு அண்ணல் அம்பேத்கருக்கு புகழஞ்சலி செய்தனர். மேலும், அம்பேத்கரின் தியாகத்தை போற்றிடும் வகையில் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அப்பகுதியைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைக் கட்சியினர், மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டு அம்பேத்கரின் நினைவு தினத்தை அனுசரித்தனர்.
Next Story