கரூரில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்ட நடமாடும் எக்ஸ்ரே வாகனத்தை ஆட்சியர் தங்கவேல்துவக்கி வைத்தார்.
Karur King 24x7 |7 Dec 2024 6:50 AM GMT
கரூரில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்ட நடமாடும் எக்ஸ்ரே வாகனத்தை ஆட்சியர் தங்கவேல்துவக்கி வைத்தார்.
கரூரில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்ட நடமாடும் எக்ஸ்ரே வாகனத்தை ஆட்சியர் தங்கவேல்துவக்கி வைத்தார். தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் சார்பில், கரூர் மாவட்டத்துக்கு நடமாடும் எக்ஸ்ரே வாகனம் வழங்கப் பட்டுள்ளது. இந்த வாகனத்தை இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் கொடியசைத்து துவக்கி வைத்தார். காசநோய் இல்லா தமிழகம் 2025 என்ற இலக்கை அடைவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக அனைத்து மாவட்டங்களுக்கும் தமிழக அரசு நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் வழங்கி உள்ளது. அதன்படி கரூர் மாவட்டத்துக்கும் இந்த வாகனம் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாகனம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் பரிசோதனை செய்யப்படும் என தகவல் தெரிவித்தனர். முன்னதாக காசநோய் பரிசோதனை கருவிகளை பார்வையிட்டு, கரூர் மாவட்டம் காசநோய் இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு ஆட்சியர் தங்கவேல் தலைமையில் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
Next Story