உழவர் சந்தை அருகே நடந்து சென்றவர் மீது அரசு பேருந்து மோதி விபத்து. ஒருவர் படுகாயம்.
Karur King 24x7 |7 Dec 2024 7:40 AM GMT
உழவர் சந்தை அருகே நடந்து சென்றவர் மீது அரசு பேருந்து மோதி விபத்து. ஒருவர் படுகாயம்.
உழவர் சந்தை அருகே நடந்து சென்றவர் மீது அரசு பேருந்து மோதி விபத்து. ஒருவர் படுகாயம். கரூர் மாவட்டம், தோரணக்கல்பட்டி, செல்லாண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் உத்திரபதி வயது 52. இவர் டிசம்பர் 4-ம் தேதி அதிகாலை 5 மணி அளவில், கரூர் - திருச்சி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பகுதியில் உள்ள உழவர் சந்தை அருகே நடந்து சென்ற போது, திருச்சி மாவட்டம், எடமலைபட்டிபுதூர், அருகே ராமச்சந்திரா நகரை சேர்ந்த தாமோதரன் வயது 37 என்பவர் வேகமாக ஓட்டி வந்த அரசு பேருந்து நடந்து சென்ற உத்தரபதி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த உத்திரபதியை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் தொடர்பாக உத்தரபதி அளித்த புகாரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரண மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக அரசு பேருந்தை வேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர் தாமோதரன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் கரூர் மாநகர காவல் துறையினர்.
Next Story