நலத்திட்ட உதவி வழங்கிய முன்னாள் அமைச்சர்

X
Pallipalayam King 24x7 |7 Dec 2024 6:33 PM ISTஏழைப் பெண்மணி வாழ்வு வளம் பெற முன்னாள் அமைச்சர் தள்ளுவண்டி வழங்கினார்
பள்ளிபாளையம் நகரம் ஏழாவது வார்டு வாய்க்கால் ரோடு பகுதியை சேர்ந்த ஜானகி அம்மாள் அவர்களுக்கு, காய்கறி வியாபாரம் செய்ய வறுமையில் உள்ள தனக்கு உதவிட வேண்டுமாய் கேட்டுக்கொண்டார் . கோரிக்கையின் அடிப்படையில் சுமார் 20,000 ரூபாய் மதிப்புள்ள காய்கறி வியாபாரத்திற்கு ஏற்ற தள்ளு வண்டியை முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி எம்எல்ஏ அவர்கள் தள்ளுவண்டி வழங்கினார் . ஏற்கனவே பலருக்கும் இதேபோல் காய்கறி வியாபாரம் ,இட்லி கடை, டீக்கடை மற்றும் பானி பூரி கடை வியாபாரிகளுக்கு தள்ளுவண்டி அளித்துள்ளார், என்பது குறிப்பிடத்தக்கது. உடன் பள்ளிபாளையம் நகர கழக செயலாளர் பி.எஸ்.வெள்ளியங்கிரி, நகர பேரவை செயலாளர் டி.கே.சுப்பிரமணி, நகர துணை செயலாளர் ஜெய் கணேஷ் மற்றும் வைத்தீஸ்வரன் ஜிம் ரமேஷ் தகவல் தொழில்நுட்ப பிரிவு சரவணன் மற்றும் பலர் உடன் இருந்தனர்....
Next Story
