அரியலூர் சிமெண்ட் ஆலை நிறுவனங்கள் சிமெண்டை உற்பத்தி விலைக்கே மாவட்ட மக்களுக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க தமிழக நீதி கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.*

X
ஜெயங்கொண்டத்தில் தமிழர் நீதி கட்சி சார்பில் அரியலூர் மாவட்ட ஆலோசனை கூட்டம் மற்றும் நிர்வாகிகள் சீரமைப்பு தேர்வு கூட்டம் ஜெயங்கொண்டம் தனியார் கூட்ட அரங்கில் தமிழர் நீதி கட்சி மற்றும் ஏர் உழவர் சங்க நிறுவனத் தலைவர் சுபா.இளவரசன் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் கட்சி செயல்பாடு குறித்தும், செயல்படும் விதம், கொள்கை குறித்தும் விரிவாக பேசினார்.கூட்டத்திற்கு தமிழர் நீதி கட்சி மாநில மகளிர் அணி தலைவர் கவியரசி இளவரசன், ஏர் உழவர் சங்க மாநில தலைவர் நல்லாசிரியர் ஆசைத்தம்பி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.முன்னதாக தமிழர் நீதி கட்சி மாநில பொருளாளர் ராமசாமி வரவேற்று பேசினார். தலைமை நிலைய செயலாளர் மதியழகன், தலைமை நிலைய பொதுக்குழு உறுப்பினர் சைமன், மாநில இலக்கிய அணி தலைவர் அறிவுமழை, மாநில செய்தி தொடர்பாளர் வீரபாண்டியன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்.தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் புதிய மாவட்ட செயலாளராக தமிழரசனும், மாவட்ட தலைவராக சிவா (எ) சிவபிரகாசமும் மாவட்ட தொழிற்சங்க தலைவராக மகேஸ்வரன், மாவட்ட தொழிற்சங்க செயலாளராக சி.இராமச்சந்திரன், ஆண்டிமடம் ஒன்றிய செயலாளராக கணேசமூர்த்தி, ஆண்டிமடம் கிழக்கு ஒன்றிய செயலாளராக மோசஸ், தா பழூர் ஒன்றிய தலைவராக கிள்ளி (எ) நடராசன், ஆண்டிமடம் துணைச் செயலாளராக சசிகுமார், ஜெயங்கொண்டம் ஒன்றிய தலைவராக பாபு, ஜெயங்கொண்டம் நகர செயலாளராக தங்கமணி, மகளிர் அணி நிர்வாகிகள் அரியலூர் மாவட்ட செயலாளராக விஜயலட்சுமி , மாவட்ட துணைத் தலைவராக பானுமதி, தமிழ் இலக்கிய அணி செயலாளராக பிரித்யங்கிரா, ஜெயங்கொண்டம் ஒன்றிய துணை செயலாளராக பவானி, ஒன்றிய தலைவராக ஜெகதாம்பாள், ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளராக செல்வி ஒன்றிய துணை செயலாளராக ராணி ஒன்றிய துணைத் தலைவராக ராசாத்தி ஆண்டிமடம் நகர செயலாளராக பெலிக்ஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.மேலும் ஆலோசனை கூட்டத்தில் மறுசீரமைப்பு குறித்தும், கட்சி பொறுப்பாளர்கள் மாற்றி நியமிப்பது குறித்தும், புதிதாக உறுப்பினர்கள் சேர்க்கை குறித்தும், கடந்த கால செயல்பாடுகளில் அலட்சியப் போக்கினை சீரமைத்து ஆரோக்கியமாக இனிவரும் காலங்களில் நடைமுறை குறித்தும் ஒவ்வொரு கட்சி பொறுப்பாளர்களும் உறுப்பினர்கள் அனைவரும் சுய விமர்சனம் செய்து கொள்ளுதல் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் அரியலூர் மாவட்டம் முழுவதையும் முழுமையான பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்,அரியலூர் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் அனைத்து சிமெண்ட் தொழிற்சாலை நிறுவனங்களும் மாவட்ட மக்களுக்கு உற்பத்தி விலைக்கே சிமெண்ட் வழங்கிட முன்வர வேண்டும்,,மாவட்ட நிர்வாகம் அடிப்படை கூலித் தொழிலாளர்களுக்கான ஊதியத்தை வெள்ளையறிக்கையாக வெளியிட வேண்டும், ஜெயங்கொண்டம் நகராட்சியில் பணியாற்றும் தூய்மைபணியார்களை ஆட்குறைப்பு செய்து வரும் நகராட்சி நிர்வாகத்தை வன்மையாக கண்டிப்பது, வணிகம் இல்லாத குடிநீர் அனைத்து மக்களுக்கும், நாடு முழுவதும் வழங்கிட அரசு முன்வர வேண்டும்,வேளாண் உற்பத்திக்கான தண்ணீர் தடையின்றி வழங்கிட வேண்டும், ஜெயங்கொண்டம் நகரில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும், மாணவர்களுக்கும் உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும்,பள்ளி பயிலும் பிள்ளைகளுக்கான கால அட்டவணை வகுப்பு நேரமாக காலை 9.00 மணி என நிர்ணயிக்க வேண்டும்,சிமெண்ட் ஆலை நிர்வாகங்களால் தோண்டப்பட்டு, கையகப்படுத்தப்பட்ட நிலங்களை ஆலை நிர்வாகமே சமன் செய்து மக்களுக்கே திரும்ப வழங்கிட அரசு முன்வரவேண்டும்,ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் சுற்றுப்பாதை தொடங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது,கூட்டத்தில் புலவர் மணிவண்ணன்,பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.முடிவில் ஓய்வு பெற்ற தமிழாசிரியர் அரங்கநாடன் நன்றி கூறினார்.
Next Story

