தாளவாடி அருகே அருளவாடி கிராமத்தில் யானைகள் அட்டகாசம்

தாளவாடி அருகே அருளவாடி கிராமத்தில் யானைகள் அட்டகாசம்
தாளவாடி அருகே அருளவாடி கிராமத்தில் யானைகள் அட்டகாசம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே ஜீரகள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட அருளவாடி கிராமத்தில் சென்னப்பா என்பவரது ராகி தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானைகள் ராகி பயிர்களை தின்றும் மிதித்தும் சேதம் செய்துள்ளன. இதனால் அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சேதம் அடைந்த ராகி பயிர்களுக்கு வனத்துறையினர் உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும்,யானைகள் விவசாய நிலங்களில் நுழைவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story