கரூரில் மக்களை தேடி மனுக்கள் பெறும் நிகழ்ச்சி ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது.

கரூரில் மக்களை தேடி மனுக்கள் பெறும் நிகழ்ச்சி ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது.
கரூரில் மக்களை தேடி மனுக்கள் பெறும் நிகழ்ச்சி ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு வார்டுகளில் வசிக்கும் பொது மக்களிடமிருந்து அவர்கள் குறைகள் அடங்கிய மனுக்கள் பெறும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம், அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ, கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, மாநகராட்சி ஆணையர் சுதா உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசுத்துறை அதிகாரிகள் பொதுமக்கள் என ஏராளமான ஊர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தமிழக மின்சாரம் மற்றும் ஆயத்தர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்களை பெற்றுக் கொண்டார். மனுக்களை நேரடியாக அமைச்சர் கையில் கொடுப்பதால் ஏராளமான பொதுமக்கள் தங்கள் குறைகள் குறித்து மனுக்களாக அளித்தனர். நிகழ்ச்சியின் நிறைவில் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுப்பதற்கு அதிகாரிகளுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
Next Story