கரடிபட்டியில் தோட்டத்தில் வேலை செய்த போது மயங்கி விழுந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
Karur King 24x7 |8 Dec 2024 2:45 PM GMT
கரடிபட்டியில் தோட்டத்தில் வேலை செய்த போது மயங்கி விழுந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
கரடிபட்டியில் தோட்டத்தில் வேலை செய்த போது மயங்கி விழுந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, கரடிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி மனைவி பொம்மியம்மாள் வயது 67. இவருக்கு சொந்தமான தோட்டத்தில் நவம்பர் 29ஆம் தேதி மாலை 6:30- மணி அளவில், வேலை பார்த்து கொண்டு இருந்தபோது திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, பின்னர் அவரை திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்த பொம்மியம்மாள் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இந்த சம்பவம் அறிந்த பொம்மியம்மாளின் மகன் ராஜேந்திரன் வயது 55 என்பவர் இது குறித்து காவல்துறையினருக்கு அளித்த புகாரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த பொம்மியம்மாளின் உடலை அதே மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அரவக்குறிச்சி காவல் துறையினர்.
Next Story