மடத்துக்குளம் பகுதியில் களரி பயிற்சிகளம் திறப்பு -

மாணவர்களுக்கு அழைப்பு
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ராஜ வீதியில் பகத்சிங் களரி களம் திறக்கப்பட்டது. மடத்துக்குளம் அக்சரா பள்ளி முருகேசன் ,விவேகானந்த பள்ளி தாளாளர் மூர்த்தி மடத்துக்குளம் பேரூராட்சி தலைவர் கலைவாணி பாலமுரளி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வகித்தனர் .நிகழ்வில் களரி போட்டியில் பயன்படுத்தப்படும் கேடயம் ,வாள்வகைகள், கம்பு உட்பட அனைத்து வித பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. இவற்றை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர் மேலும் நிகழ்வில் அரியானா மாநிலத்தில் களரி பயிட்டு போட்டியில் அபார வெற்றி பெற்ற மாணவர் சுஜித் மற்றும் பல்வேறு மாணவர்கள் களரி பயிற்சியில் உள்ள பல்வேறு பிரிவுகளை செய்து அசத்தினர்.மேலும் சிறப்பு விருந்தினர்களாக பால் ஆசான் ,ஆல்வின் ஆசான் ,அப்துல் ஹக்கீம் ,சைனிக் பள்ளி ஆசிரியர் இளமுருகு, ஹரிபிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர். திருப்பூர் மாவட்டத்தில் களரிக்கு என தனி களம் இல்லாததால் களரி பயிற்சி ஆர்வமுள்ள மாணவர் மாணவியர் சிரமப்பட்டு வந்தனர் அவர்களை உற்சாகப்படுத்தும் வகையிலும் பயிற்சிகளை சிறப்பாக பெறும் வகையிலும் மடத்துக்குளத்தில் புதிதாக களரி பயிற்சிகளம் அமைக்கப்பட்டு உள்ளது மாணவர்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ளவேண்டும் களரி பயட்டு ஆசிரியர் வீரமணி தெரிவித்தார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை களரி பயட்டு அசோசியேசன் ஆப் தமிழ்நாடு செயலாளர் மற்றும் தலைவர் பகத்சிங் சிலம்பம் களரி ஆர்ட்ஸ் கல்சுரல் & சாரி ட்ரிபிள் டிரஸ்ட் ஆசான் வீரமணி மற்றும் களரி ஆர்வலர்கள் செய்திருந்தனர்.
Next Story