ஜெயங்கொண்டம் அருகே சாலைபணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொக்லைன் இயந்திரம் எரிந்ததால் பரபரப்பு.*

X
அரியலூர், டிச.9- அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதியில் விக்கிரவாண்டி-தஞ்சாவூர் வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், இருபுறமும் 100 மற்றும் 75 அடி இடத்தை தேசிய நெடுஞ்சாலைத்துறை கையகப்படுத்தி சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் நான்கு வழிச்சாலை பணி மட்டும் இல்லாமல் மேம்பாலம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.நேற்று இரவு சாலை அமைக்கும் பணி முடிந்ததும் கனரக வாகன பொக்லைன் எந்திரத்தை நிறுத்தி விட்டு சென்ற போது தானாகவே தீப்பற்றி எரிந்ததாக தெரிகிறது. இதுகுறித்து மீன்சுருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதியில் விக்கிரவாண்டி-தஞ்சாவூர் வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.மேலும் சில இடங்களில் மேம்பாலம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் நேற்று இரவு காடுவெட்டி பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்றது.இதில் கனரக வாகனமான பொக்லைன் எந்திரம் இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. சாலை அமைக்கும் பணி இரவு 2 மணி வரை நடைபெற்றதாக தெரிகிறது. பின்னர் கனரக வாகனமான பொக்லைன் இயந்திரத்தை அங்கேயே நிறுத்தி விட்டு தனியார் நிறுவன ஆட்கள் தங்களது இருப்பிடத்திற்கு வந்ததாக தெரிகிறது. அதிகாலை 4 மணியளவில் கனரக வாகனமான பொக்லைன் இயந்திரம் தானாகவே தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது.இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக ஜெயங்கொண்டம்தில் உள்ள தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கனரக வாகனமான பொக்லைன் இயந்திரம் கொழுந்து விட்டு எரிய தொடங்கியது, நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story

