அரசு பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய முன்னாள் அமைச்சர்
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் இன்று 09.12.2024 தமிழ்நாடு முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பொ.மல்லாபுரம் பேரூர் கழக செயலாளர் கு.கெளதமன் ஏற்பாட்டில்,தருமபுரி திமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முனைவர் பி.பழனியப்பன் M.Sc,Phd, தலைமையேற்று தொடக்கப் பள்ளி மாணவ, மாணவியர் 150 பேர்க்கு நோட், பேனா, பென்சில், பள்ளி குறிப்பேடு வழங்கினார்.இந்த நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.சித்தார்த்தன் மாநில வர்த்தகர் அணி துணை செயலாளர் அ.சத்தியமூர்த்தி பேரூராட்சி தலைவர் சாந்தி புஷ்பராஜ், மற்றும் மாவட்ட, ஒன்றிய,கழக நிர்வாகிகள்,சார்பு அணி நிர்வாகிகள், கழகமுன்னோடிகள்,உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
Next Story




