மதுரை மாநகர் காவல் துறையின் முக்கிய அறிவிப்பு.

X
மதுரை மாநகர் காவல்துறை எல்கைக்கு உட்பட்ட அவனியாபுரத்தில் மதுரை, விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிலையம் மூலம் உள்நாட்டு விமான போக்குவரத்து மட்டுமல்லாமல் வெளிநாட்டிற்கு நேரடியான விமான போக்குவரத்து செயல்பட்டு வருகிறது. மதுரை விமான நிலையத்தில் விமானங்கள் தரையிரங்கும் போதும் (Landing), விமான நிலையத்திலிருந்து விமானங்கள் மேலெழும்பும் போதும் (Take off) அதனை பார்வையிடுவதற்காக விமான நிலையத்தின் வெளியே தெற்கு பக்கம் உள்ள காம்பவுண்டு சுவர் அருகிலும், பரம்புப்பட்டி கிராமத்திற்கு அருகிலும் மற்றும் சில இடங்களில் பொதுமக்கள் கூடி நின்று பார்வையிட்டு வருகின்றனர். 2) இந்நிலையில் விமானங்களை பார்வையிட கூடும் பொதுமக்களில் சிலர் விமான நிலையத்தில் விமானங்கள் தரையிரங்கும் போதும் (Landing), விமானங்கள் மேலெழும்பும் போதும் (Take off) கண்களை கூச செய்யும் திறன் கொண்ட லேசர் ஒளி (Laser beam) மற்றும் பிளாஷ் லைட்டினை (Flash light) விமானங்களை நோக்கி அனுப்புவதாக தெரியவருகிறது. பொதுமக்களில் சிலரின் மேற்படி செயல்களினால் விமானங்களை இயக்கும் விமானிகள் விமானங்களை இயக்குவதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. 3) எனவே மதுரை விமான நிலையத்தில் விமானங்கள் தரையிரங்கும் போதும் (Landing), விமானங்கள் மேலெழும்பும் போதும் (Take off) அதனை பார்வையிடுவதற்காக விமான நிலையத்தின் வெளியே தெற்கு பக்கம் உள்ள காம்பவுண்டு சுவர் அருகிலும், பரம்புப்பட்டி கிராமத்திற்கு அருகிலும் மற்றும் சில இடங்களில் கூடும் பொதுமக்கள் கண்களை கூச செய்யும் திறன் கொண்ட லேசர் ஒளி (Laser beam) மற்றும் பிளாஷ் லைட்டினை (Flash light) விமானங்களை நோக்கி அனுப்ப கூடாது என்றும், அதனை மீறுபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதனை இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது. மேலும் மேற்படி செயல்கள் செய்யும் நபர்களை பற்றிய விபரத்தினை V-2 அவனியாபுரம் காவல் நிலையத்திற்கு (0452-2671168, 0452-2342496) உடன் தகவல் தெரிவிக்க பொதுமக்களை மதுரை மாநகர காவல்துறை கேட்டுக் கொள்கிறது
Next Story

