கரூரில் போராடும் ஜனநாயக உரிமையை அபகரிக்கும் காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

கரூரில் போராடும் ஜனநாயக உரிமையை அபகரிக்கும் காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
கரூரில் போராடும் ஜனநாயக உரிமையை அபகரிக்கும் காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம். ஏ ஐ டி யூ சி சார்பில் இன்று தமிழக முழுவதும் மாவட்ட தலைநகரங்களில், ஜனநாயக உரிமையை அபகரிக்கும் காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு ஏ ஐ டி யு சி மாவட்ட துணை செயலாளர் கலா ராணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இவ் அமைப்பை சேர்ந்த சக்திவேல், முருகானந்தம், தமிழ்ச்செல்வன், மாணிக்க சுந்தரம் உள்ளிட்ட நிர்வாகிகள் சுமார் 40க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக ஏஐடிசி மாவட்ட செயலாளர் ஜி பி எஸ் வடிவேல், மாவட்ட செயலாளர் நாட்ராயன், மாவட்ட தலைவர் குப்புசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன கோஷத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழ்நாட்டில் ஜனநாயக ரீதியாக அமைதியான முறையில் நடைபெறும் போராட்டங்களுக்கான உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருவது குறித்தும், ஆர்ப்பாட்டங்கள், தர்ணா போன்ற சட்டபூர்வமான, ஜனநாயக பூர்வமான போராட்டங்களுக்கு காவல்துறையிடம் அனுமதி பெறுவதற்கு பலமுறை முயன்றாலும், தேவையற்ற முறையில் நிபந்தனை விதிப்பது, கடைசி நேரம் வரை காத்திருந்து அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி, ஒன்றுகூட விடாமல் தடுப்பது, கைது செய்வது, வழக்கு பதிவு செய்வது போன்ற ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயல் நடைபெற்று வருவதால், இதனை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்
Next Story