கும்பகோணம் அருகே மினி பஸ் ஓட்டுனர் கொலை வழக்கில் தேடப்பட்ட மூன்று குற்றவாளிகள் ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் சரண்.

கும்பகோணம் அருகே மினி பஸ் ஓட்டுனர் கொலை வழக்கில் தேடப்பட்ட மூன்று குற்றவாளிகள் ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் சரண்.
X
கும்பகோணம் அருகே மினி பஸ் ஓட்டுனர் கொலை வழக்கில் தேடப்பட்ட மூன்று குற்றவாளிகள் ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
அரியலூர், டிச.9- கும்பகோணம் அருகே மினி பஸ் ஓட்டுனர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் 3 பேர் ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பசுபதிகோவில்  சேர்ந்த சிவசங்கர் மகன்  சிவமணிகண்டன் (25). மினி பஸ் ஓட்டுநரான இவரை கடந்த சனிக்கிழமை அய்யம்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே  இரு சக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த 3 பேரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.இதுகுறித்து அய்யம்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து அய்யம்பேட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு  தலைமையில் 5 தனிப் படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்  குற்றவாளிகளுக்கு இரு சக்கர வாகனம் கொடுத்த சிறுவன் உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர் இதனையடுத்து சிவமணிகண்டனை கொலை செய்த 3 பேரை தனிப்படையினர் தொடர்ந்து தேடிவந்தனர். இந்நிலையில் சிவமணிக்கண்டனை கொலை செய்த அய்யம்பேட்டை கிராமம் ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்த சேர்ந்த ஜெயக்குமார் மகன் சுந்தரேசன் (20) அய்யம்பேட்டை மதகடி பஜார் தெருவை சேர்ந்த ராமச்சந்திரன் மகன்  பரமேஸ்வரன் (20), அய்யம்பேட்டை வெள்ளான் செட்டி தெருவை சேர்ந்த சுதாகரன் மகன்   ராகுல் (18) ஆகிய மூன்று பேரும் இன்று ஜெயங்கொண்டம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சரணடைந்தனர். குற்றவியல் நீதிபதி ராஜசேகரன் முன்னிலையில் சரணடைந்த  மூன்று பேருக்கும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.இதில் சுந்தரேசன் என்பவருக்கு அடிதடி  உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story