நில அளவையர்கள் காத்திருப்பு போராட்டம்

நில அளவையர்கள் காத்திருப்பு போராட்டம்
குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நில அளவையர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சங்கத்தின் சார்பில் ஒன்பதச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கோட்டத் தலைவர் ராஜா தலைமையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் இதில் முக்கிய கோரிக்கைகளாக களப்பணியாற்றும் அனைத்து விதமான பணிகளையும் கணக்கில் கொண்டு ஆய்வு செய்ய வேண்டும் மனித திறனுக்கு ஏற்ற குறியீடுகளை வரையறுக்கவும் தரமிறக்கப்பட்ட குறு வட்ட அளவர் பதவியினை பெற்று தகுதியுள்ள நில அளவர்களுக்கு பதவி உயர்வு வழங்கிட வேண்டும் ஆய்வாளர் துணை ஆய்வாளர் ஊதிய முரண்பாட்டை கலைந்திட வேண்டும் சிறப்பு திட்டங்கள் மூலம் நிலம் எடுப்பு பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்களில் நில அளவைக் கள பணியாளர்களுக்கு பதிவு உயர்வு வழங்கிட வேண்டும் உள்பட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது அதன் முதல் கட்டமாக இன்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது இதில் நில அளவையர் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்
Next Story