திருப்பத்தூரில் நில அளவை அலுவலர்கள் பணிகளை புறகணித்து வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்..

X
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் நில அளவை அலுவலர்கள் பணிகளை புறகணித்து வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்.. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றினைப்பு சார்பில் நில அளவை களப்பணியாளர்களின் 9அம்ச கோரிக்கைகளை வலியுறித்தி பணிகளை புறக்கணித்து 20க்கும் மேற்பட்ட நில அளவை அலுவலர்கள் மாவட்ட தலைவர் முரளிவானன் தலைமையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது களப்பணியாளர்கள் செய்யும் அனைத்து விதமான பணிகளையும் கணக்கில் கொண்டு ஆய்வு மேற்கொள்ளவும், மனித திறனுக்கு ஏற்ற குறியீடுகளை வரையறுக்கவும் கோருதல். ஆய்வாளர், துணை ஆய்வாளர் ஊதிய முரண்பாட்டை களைந்திட வேண்டும். தமிழ்நாடு முழுவதும் அனைத்து துறைகளிலும் அரசானை எண் 10ஐ கடைப்பிடிக்கும் போது மாறுதல் நடைமுறையை நில அளவைப் பதிவேடுகள் துறையில் மாற்றி அமைத்திட எடுக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என 9 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றா விட்டால் தமிழகம் முழுவதும் இன்று முதல் கட்ட போராட்டம் நடைப்பெற்று வருகிறது. பின்னர் அடுத்த இரண்டு கட்ட போராட்டங்களுக்கு பிறகு தமிழக அரசு கோரிக்கைகளை நிறைவேற்றா விட்டால் மிகப்பெரிய போராட்டம் நடைப்பெறும் என எச்சிரிக்கை விடுத்துள்ளனர். இந்த போராட்டத்தில் மாவட்ட செயலாளர் பாபு, மாவட்ட பொருளாளர் வினோத், மாவட்ட துணைத்தலைவர் பூபதி, உறுப்பினர்கள் ரவி, மதன், பெருமாள், பூவிதா,ஏகாம்பரம், பொற்கொடி, வெள்ளையதேவன், ரமா, நீளகண்டன் உள்ளிட்ட ஏராளமான பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர் பேட்டி; முரளிவாணன்
Next Story

