அடிப்படை வசதிகள் நிறைவேற்றி தர வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்த கிராம பொதுமக்கள்.

அடிப்படை வசதிகள் நிறைவேற்றி தர வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்த கிராம பொதுமக்கள்.
அடிப்படை வசதிகள் நிறைவேற்றி தர வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்த கிராம பொதுமக்கள். கரூர் மாவட்டம், குளித்தலை தாலுக்கா, மருதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கணேசபுரம் பகுதியில் வசிக்கும் 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வாராந்திர குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்க வந்தனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட கிராமத்தில் வசிக்கும் பெண் நாகலட்சுமி செய்தியாளர்களிடம் தெரிவிக்கும்போது, எங்கள் ஊரின் மையப்பகுதியில் அரசியல் பின்புலத்தில் உள்ள பெண் ஒருவர் மது பாட்டில்களை வைத்து சந்துக் கடை வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனால், பெண்கள், மாணவிகள் அச்சத்துடனே ஊருக்குள் வந்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. மேலும், ஊரின் மையப்பகுதியில் பயன்படுத்தாமல் உள்ள கிணற்றினால் துர்நாற்றம் ஏற்பட்டு வருகிறது. சாக்கடை வசதிகளும் முறையாக செய்து தரப்படவில்லை. இதனால், மழைக்காலங்களில் மழை நீரோடு சாக்கடை கழிவுநீரும் தேங்கி இருப்பதால் அதிலேயே நாங்கள் நடந்து செல்ல வேண்டிய இக்கட்டான நிலையில் உள்ளது. மேலும், எங்கள் ஊரில் காலமானவர்களின் உடல்களை புதைப்பதற்கு மயானம் இல்லை. இதனால் இறந்தவர்களை அடக்கம் செய்யும் நாளன்று பல்வேறு மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதால், எங்களுக்கு எங்கள் பகுதியில் மயானத்தை ஒதுக்கி தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும், வந்து சம்பவ இடத்தை பார்வையிடுகிறார்கள். பின்னர் அமைதியாக சென்று விடுகிறார்கள். நடவடிக்கை எதுவும் எடுப்பதில்லை. அதனால், இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட வந்துள்ளதாக தெரிவித்தார்.
Next Story