மடத்துக்குளம் பகுதியில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்ட விளை நிலங்களை பார்வையிட்ட முன்னாள் எம்எல்ஏ!
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகா நீலம்பூர்,கண்ணாடிபுத்தூர் புதிய வாய்க்கால் பாசனத்தில் நடவு செய்யப்பட்ட நெல் பயிர்கள் நடவு செய்தும் 20 முதல் 30 நாட்கள் ஆகியும் உரிய முளைப்பு திறன் இன்றி பாதிக்கப்பட்ட விவசாயிகளின் விளை நிலங்களை மடத்துக்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இரா.ஜெயராமகிருஷ்ணன் ஆய்வு செய்து நோயால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை காப்பாற்ற அரசு அதிகாரிகளிடம் தெரிவித்து உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயிகளிடம் உறுதி கூறினார். திமுக பேரூர் கழக செயலாளர் பாலகிருஷ்ணன் ஒன்றிய துணை செயலாளர் பாலமுரளி ஆகியோர் உடனிருந்தனர்.
Next Story



