ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டும். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை.

Paramathi Velur King 24x7 |9 Dec 2024 9:04 PM ISTஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டுமென தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளனர்.
பரமத்தி வேலூர், டிச. 9: தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் கபிலர்மலை ஒன்றியச் செயற்குழுக் கூட்டம் பொத்தனூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஒன்றியத் தலைவர் ந.மணிவண்ணன் தலைமை வகித்தார். ஒன்றியத் துணைச் செயலாளர் சு.சந்திரகாந்தா வரவேற்புரை ஆற்றினார். மாவட்டச்செயலாளர் மெ.சங்கர் செயற்குழுவினை தொடங்கிவைத்து தொடக்க உரை ஆற்றினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள்: உயிர்காக்கும் மருத்துவர் மற்றும் மருத்துவமனைகளுக்கு பாதுகாப்புச்சட்டம் இருப்பதுப் போன்று பள்ளி ஆசிரியர் பணிப்பாதுகாப்புச் சட்டம் இயற்றப்படல் வேண்டும். மத்திய அரசுப் பள்ளி ஆசிரியருக்கு இணையான ஊதியம் தமிழ்நாட்டின் இடைநிலை தொடக்கநிலை ஆசிரியருக்கு 01.06.2006 முதல் வழங்கிடல் வேண்டும். நிதி மோசடித்திட்டமான புதிய ஓய்வூதியத் திட்டத்தினை முற்றிலுமாக இரத்து செய்துவிட்டு தமிழ்நாட்டின் ஆசிரியர் அரசு ஊழியருக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை 01.04.2003 முதல் தொடர்ந்திடல் வேண்டும். சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதியின் படி உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுகளை பள்ளி ஆசிரியருக்கு தொடர்ந்து தமிழ்நாடு அரசு வழங்கிடல் வேண்டும் என உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆலோசனைக் கூட்டத்திற்கு மாநிலப்பொருளாளர் முருகசெல்வராசன் ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் த.செந்தாமரை,மாவட்டத்துணைத் தலைவர் இரா.இரவிக்குமார், மாவட்டத்துணைச் செயலாளர் வெ.வடிவேல், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் த.தண்டபாணி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
Next Story
