ஜேடர்பாளையம் அருகே கிராவல் மண் அள்ளிச்சென்ற லாரி பறிமுதல் டிரைவர் கைது.

X
Paramathi Velur King 24x7 |9 Dec 2024 9:12 PM ISTஜேடர்பாளையம் அருகே கிராவல் மண் அள்ளிச்சென்ற லாரி பறிமுதல் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமத்திவேலூர், டிச.9: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள கண்டிபாளையத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (28). இவர் கொத்தமங்கலத்தில் உள்ள ஒரு பட்டா நிலத்தில் கிராவல் மண்ணை லாரியில் அள்ளி வருவதாக நாமக்கல் புவியியல் மற்றும் சுரங்கத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாமக்கல் புவியியல் மற்றும் சுரங்கத் துறை புவியியலாளர் நந்தகுமார் தலைமையிலான அலுவலர்கள் அரசு அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிய டிப்பர் லாரியை பறிமுதல் செய்து ஜேடர்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து ஜேடர்பாளையம் - போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்து லாரி டிரைவர் தமிழ்செல்வனை கைது செய்தனர்.
Next Story
